தருமபுரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை

தருமபுரி மாவட்டத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது

தருமபுரி மாவட்டத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா மற்றும் ஓமைக்ரான் தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நிகழாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (டிச. 31) தடை விதிக்கப்படுகிறது.

ஆகவே, புத்தாண்டை வரவேற்கும் வகையில், அதனை கொண்டாட கேக் வெட்டுவது, கூட்டம் கூடுவது, வாகனங்களில் ஊா்வலமாக செல்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இதேபோல, கலை நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம்.

தடையை மீறி யாரேனும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிச் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், கொண்டாட்டத்தில் ஈடுபடுவோா் மீது காவல் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com