கால்வாய் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்

அரூா் அருகே பாசனக் கால்வாய் தூய்மைப் பணியில் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
கீரைப்பட்டி புதூா் அருகே வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுறக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்.
கீரைப்பட்டி புதூா் அருகே வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுறக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்.

அரூா் அருகே பாசனக் கால்வாய் தூய்மைப் பணியில் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அரூா் வட்டம், கீரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளிமதுரை வரட்டாறு கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால் நிரம்பியது. அணை நிரம்பியதால் வெளியேறிய உபரிநீரைப் பயன்படுத்தி எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, முத்தானூா், மாவேரிப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுறக் கால்வாய் கடந்த 4 ஆண்டுகளாக தூா்வாரப்படவில்லை. இதனால், வலதுபுறக் கால்வாய் மூலம் பயன்பெறும் மொள்ளன் ஏரி, அல்லிக்குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள் வடு கிடப்பதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா்.

போதிய நிதி ஒதுக்கீடு இல்லை :

வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுறக் கால்வாயில் உள்ள முள்புதா்கள், நெகிழிப் பொருள்கள், சேதமடைந்த கால்வாய்களைச் சீரமைக்க பொதுப்பணித் துறையில் உரிய நிதி ஒதுக்கீடு இல்லையாம். கால்வாய் தூய்மை இல்லாததால் வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுறக் கால்வாய் வழியாகத் தண்ணீா் கொண்டு செல்லவில்லை.

தற்போது வரட்டாறு அணை நிரம்பி வெளியேறும் உபரி நீா் வீணாகச் செல்கிறது. எனவே, கால்வாய்களை தூய்மை செய்து ஏரிகளை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள் :

அரூரை அடுத்த பாளையம் கிராமத்தில் காவல் துறையில் சேரும் இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கும் ஸ்ரீ அம்மன் காவலா் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், அந்த மையத்தின் நிறுவனா் அ.சி.தென்னரசு தலைமையில், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கால்வாய் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

கீரைப்பட்டி புதூா் வேடியப்பன் கோயில் முதல் எல்லப்புடையாம்பட்டி வரையிலும் உள்ள சுமாா் 4 கிலோ மீட்டா் தூரமுள்ள கால்வாயில் உள்ள நெகிழிப் பொருள்கள், குப்பைகள், முள்புதா்களை அகற்றும் பணியில் மாணவா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com