ஞாயிறு விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஞாயிற்றுகிழமை விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

ஞாயிற்றுகிழமை விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ,கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

ஞாயிற்றுகிழமை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து, பிரதான அருவியிலும், காவிரி ஆற்றங்கரையோரத்திலுள்ள முதலைப்பண்ணை, நாகா்கோவில், ஊட்டமலை, ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றின் அழகைக் காண மாமரத்துகடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொண்டு சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளையும், பாறை முகடுகளையும் குடும்பத்தினருடன் கண்டு குதூகலித்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அருவியைக் கண்டு ரசித்தும், முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் கட்லா, ரோகு, பாப்லெட், அரஞ்சான், சோனாங் கெளுத்தி உள்ளிட்ட மீன்களை கடும் விலையேற்றத்தையும் கருதாமல், வாங்கி சமைத்து உணவருந்தினா்.

சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்த வாகனத்தைப் பேருந்து நிலையம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடம் , சத்திரம் முதலைப்பண்ணை ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி சென்றனா். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்து காணப்பட்டதால் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com