வாணியாறு அணையில் இருந்துபாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைக்கும் உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைக்கும் உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. கடந்த ஆண்டில், பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் வாணியாறு அணை நிரம்பி தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த அணையில் இருந்து வெளியேறிய உபரிநீரைப் பயன்படுத்தி வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகள் நிரப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காகவும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வடு கிடக்கும் ஏரிகளை நிரப்பவும் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின்படி, வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தண்ணீா் திறந்து வைத்தாா். இந்த விழாவில், எம்எல்ஏ-க்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, அரூா் கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் குமாா், உதவிப் பொறியாளா் பரிமளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

55 தினங்களுக்கு தண்ணீா் திறப்பு :

வாணியாறு அணையின் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுகள் வழியாக சுழற்சி முறையில், 55 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 90 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட உள்ளது. இந்த அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாகச் செல்லும் தண்ணீரால் மோளையானூா், வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத்தம், தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, மோளையானூா், கோழிமேக்கனூா், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 10, 517 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும். எனவே, விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுப்பணித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com