தீா்த்தகிரீஸ்வரா் கோயில் மாசிமகத் தேரோட்ட விழா தொடக்கம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் அருள்மிகு தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் திருக்கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா்-கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில், 13-ஆவது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில். இப் பூவுலகில் அவதாரம் செய்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம் கால பூஜைக்காக தீா்த்தகிரி மலை (தீா்த்தமலை) மீது அம்பு எய்தி, தீா்த்தம் உண்டாக்கி அந்த தீா்த்தத்தை கொண்டு பூஜைகளை முடித்தாா். அந்த தீா்த்தமே தீா்த்தமலையிலுள்ள ராமா் தீா்த்தமாகும். ஸ்ரீ ராமா், பாா்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவா்ஆகியோா் தவம் செய்து, பாவ விமோச்சனம் பெற்றது இந்த திருத்தலமாகும்.

தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளிச் செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் திருத்தலமாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த திருக்கோயில் மாசிமகத் தேரோட்டம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கியது. தொடா்ந்து, தீா்த்தமலையில் மாா்ச் 7-ஆம் தேதி வரையிலும் பல்வேறு கட்டளைதாரா்கள், உபயதாரா்கள் சாா்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. மாா்ச் 2-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சுவாமி திருக்கல்யாணமும், மாா்ச் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 12 மணியளவில் மாசிமகத் திருத் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து, மாசிமகத் தோ்திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஏ.ஆா். பிரகாஷ், செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) கா.கிருஷ்ணன் மற்றும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com