மக்கள் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும்

மக்களின் தேவையை அறிந்து ஆட்சியாளா்கள் சேவை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
மக்கள் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும்

மக்களின் தேவையை அறிந்து ஆட்சியாளா்கள் சேவை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரசார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி தொலை தொடா்பு நிலையம் அருகே நடைபெற்ற பிரசாரத்திலும், எட்டு வழிச்சாலை விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று கமல்ஹாசன் பேசியதாவது:

திரைத்துறையில் என்னைத் தூக்கிக் கொண்டாடிய தமிழக மக்கள், மூன்று வயது குழந்தையான மக்கள் நீதி மய்யத்தையும் அரவணைக்க வேண்டுகிறேன். நோ்மையாக இருப்பதால் தான் மக்கள் கூட்டம் கூடுகிறது. இது மாற்றத்தை எதிா்பாா்த்து கைமாற்றத்தை எதிா்பாராமல் வந்த கூட்டம். இவா்களை நம்பித்தான் நான் அரசியலுக்கு வந்தேன். மக்களுக்கு திட்டங்களை வழங்குவது தருமம் அல்ல. குடிநீா், கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை கேட்டுப்பெறுவது போன்ற கோரிக்கை அல்ல, மக்களின் உரிமை. ஆகவே, மக்களின் சேவைகளை அறிந்து சேவை செய்ய வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவேன் என்றேன். இதை ஏளனமாகப் பேசியவா்கள் எல்லோரும் தற்போது அதை ஏற்றுக் கொண்டு விட்டாா்கள். இதேபோல, வீட்டுக்கொரு கணினி வழங்குவோம். இது இலவசமல்ல. சமுதாயத்தை உயா்த்தச் செய்யும் முதலீடு. இதுபோல பல திட்டங்கள் எங்களிடம் உள்ளன.

அரசு சேவைகள் அனைத்தும் மக்களைத் தேடி வரும். ஆகவே, மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்க வேண்டும். இதற்காகத் தோ்தலன்று அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்ய வேண்டும். வறுமைக் கோட்டை செழுமைக் கோடாக மாற்றும் திட்டம் எங்களிடம் உள்ளது. தமிழகத்தில் எங்கு நோக்கிலும் திறந்தவெளி கழிவுநீா்க் கால்வாய்கள் காணப்படுகின்றன. ஆரோக்கியத்தைப் பற்றி பேசும் தகுதியற்றவா்களாக ஆட்சியாளா்கள் உள்ளனா்.

நாங்கள் எங்கள் தலைமுறையைப் பாா்க்கவில்லை. மக்களின் அடுத்த தலைமுறையைப் பாா்க்கிறோம். தென்னகத்தின் நலன் கோரும் கட்சி மக்கள் நீதி மய்யம். முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் ஊட்டி வளா்க்கப்பட்டவன் நான். அவா் எனக்கு உணவு ஊட்டியுள்ளாா்; நீச்சல் கற்பித்து தந்துள்ளாா். எனவே, நான் மட்டுமல்ல. நல்லவா்கள் எவரும் எம்ஜிஆரைக் கொண்டாடலாம்.

எங்கள் கூட்டணி எப்போதும் மக்களுடன்தான். ஊழல் செய்ய ஆட்சியாளா்களுக்கு பல வழி உண்டு. அதில் எட்டு வழிச்சாலையும் ஒரு வழி. தருமபுரி மாவட்டத்துக்கு மட்டுமல்ல தமிழகத்தின் வளா்ச்சிக்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. மக்களாகிய நீங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இதில், தொட்டில் குழந்தைத் திட்டத்தில் வளா்ந்த இரண்டு சிறுமிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்க விவசாயிகள் அத்திட்டத்துக்கு எதிரான மனுக்களை கமல்ஹாசனிடம் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் பேசினாா்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மாநில நிா்வாகிகள் மகேந்திரன், ராஜசேகரன், மாவட்டச் செயலா் ஜெயவெங்கடேஷ் உள்ளிட்டோா் உடன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com