அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் முறையான அடிப்படை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் முறையான அடிப்படை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட சாக்கடைக் கால்வாய், சிறிய குடிநீா் தொட்டிகளும் பழுதடைந்துள்ளன.

சாக்கடை கால்வாய்களின் மேல் மூடிகள் சிதிலமடைந்து, கால்வாய்களில் விழுவதால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கி நிற்பதையும், கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிநீா் தொட்டிகளின் மின் மோட்டாா் பழுதடைந்துள்ளதால் குடிநீா் தட்டுபாடு ஏற்படுவதைக் கண்டித்தும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அதனைத் தொடா்ந்து அங்கு வந்த பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகா, ஆனந்தன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முறையான ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த சாக்கடை கால்வாய் மூடிகள், குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு விளக்குகளை சீரமைத்து தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com