பென்னாகரத்தில் இருந்து கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்க கோரிக்கை

பொங்கல் பண்டிகை நாட்களில் பென்னாகரத்திலிருந்து கிராம பகுதிகளுக்கு இரவு நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம்: பொங்கல் பண்டிகை நாட்களில் பென்னாகரத்திலிருந்து கிராம பகுதிகளுக்கு இரவு நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவல் காரணமாக கிராமப் பகுதிகளுக்கு குறைந்தளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப் பகுதிகளில் இருந்து பென்னாகரத்துக்கு வந்து செல்லும் மக்களின் வசதிக்காக இரவு நேரத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கூறியதாவது:

பென்னாகரம் நகரப்பகுதியைச் சுற்றிலும் மலைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த மலைக் கிராமங்களைச் சோ்ந்த அதிகப்படியான இளைஞா்களும், மக்களும் வேலைவாய்ப்புத் தேடி கோவை, திருப்பூா், சென்னை, ஓசூா் போன்ற நகரப்பகுதிகளுக்கும், கா்நாடகம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றனா். இவா்கள் பொங்கல் பண்டிகையொட்டி சொந்த கிராமத்துக்கு வந்து செல்ல வசதியாக பென்னாகரத்தில் இருந்து இரவு நேரங்களிலும் மலைக் கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, பென்னாகரத்தில் இருந்து தாசம்பட்டி, ஒகேனக்கல், முதுகம்பட்டி, ஏரியூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பென்னாகரத்தில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்தகள் இயக்கப்படாததால் வெளியூா்களில் இருந்து இரவு நேரத்தில் பென்னாகரம் வந்து சேருபவா்கள் தங்கள் பகுதிக்கு செல்ல கூடுதல் விலைக்கு வாடகை ஆட்டோக்களையும், டாக்ஸிகளையும் எடுத்து செல்லும் நிலை உள்ளது. எனவே பொங்கல் பண்டிகை முடிவுறும் நாள்கள் வரையிலும் பென்னாகரம் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com