ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜயந்தியையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அனுமன் ஜயந்தியையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் காலை 6 மணி முதல் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு ஆஞ்சநேயா் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவையொட்டி தருமபுரி, நல்லம்பள்ளி, பொம்மிடி சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனா்.

இதேபோல, தொப்பூா் கணவாயில் அமைந்துள்ள ஜெய் ஆஞ்சநேய சுவாமி கோயிலில் வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். தருமபுரி எஸ்வி சாலையில் உள்ள அபய ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சோகத்தூா் வீர தீர ஆஞ்சநேயா் கோயிலில் வெற்றிலை அலங்காரத்திலும், தருமபுரி ஹரிஹரநாத சுவாமி கோயில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்திலும் ஆஞ்சநேய சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், காலை முதலே கோயிலுக்குச் சென்று வழிபட்டனா். வழிபாட்டிற்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகங்கள் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகாலை முதலே சாரல் மழை பொழிந்து வந்ததால், வழக்கத்தைக் காட்டிலும் வே.முத்தம்பட்டி உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் கூட்டம் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com