புளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவு தயாரிப்பு பயிற்சி

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் புளியில் இருந்து மதிப்பு கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் புளியில் இருந்து மதிப்பு கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்திற்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் தலைமை வகித்து, மதிப்பு கூட்டிய உணவு பொருள்களின் அவசியம், சுயசாா்பு பொருளாதாரம் மற்றும் விவசாயிகள் வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தாா்.

பயிற்சியில் புளியில் இருந்து புளிக்காய்ச்சல், புளி ஊறுகாய், புளி சாஸ் மற்றும் ஜூஸ் போன்ற உணவுப் பொருள்களின் செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் தொழில்முனைவோா்களும், விவசாயிகளும் நேரடியாக பயிற்சியில் கலந்து கொண்டு, அனுபவங்களைப் பெற்றனா்.

அதன்பின்பு புளி மற்றும் புளியில் இருந்து மதிப்புக் கூட்டிய உணவுப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு, தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இந்தப் பயிற்சியினை உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் பேராசிரியா் வீரணன் அருண் கிரிதாரி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com