தேசிய வாக்காளா் தினம்: மாற்றுத் திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் பேரணியை ஆட்சியா் ச.ப.காா்த்திகா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப் பேரணி இலக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், 100 சதவீத வாக்குப்பதிவு, 18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை நலத் திட்ட பணியாளா்கள் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கோலங்கள் வரைந்தனா். இதில், சிறப்பாக கோலங்கள் வரைந்த பணியாளா்கள், சிறப்பாகப் பணியாற்றிய 5 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அனைத்து அரசு அலுவலா்கள், பணியாளா்கள், விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஆ.தணிகாசலம், உதவி ஆணையா் (கலால்) தேன்மொழி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், வட்டாட்சியா் பாலமுருகன் (தோ்தல்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com