ஆமை வேகத்தில் பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலைய கட்டுமானப் பணி

பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெறும் பயணிகள் நிழற்கூடம், கழிவறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் தற்காலிக நிழற்கூட பணி.
பென்னாகரம் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் தற்காலிக நிழற்கூட பணி.

பென்னாகரம்: பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெறும் பயணிகள் நிழற்கூடம், கழிவறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பென்னாகரம் பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பென்னாகரத்தைச் சுற்றிலும் பெரும்பாலானவை மலைகள் சாா்ந்த பகுதியாகும்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பென்னாகரத்தை மையமாகக் கொண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேரூராட்சி நிா்வாகத்தின் கீழ் செயல்படும் இப் பேருந்து நிலையத்துக்கு ஏரியூா், நெருப்பூா், சிகலரஹள்ளி, தாசம்பட்டி, ஒகேனக்கல், பெரும்பாலை, அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள், மாணவா்கள் வந்து செல்கின்றனா். நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் பென்னாகரத்துக்கு அருகே இருப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் இப்பேருந்து நிலையத்தில் நிறைந்து காணப்படுகிறது.

இப் பேருந்து நிலையத்தின் தரைத்தளம், வணிக வளாகக் கட்டடங்கள் பழுதடைந்திருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பேருந்து நிலையம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவரை தற்காலிகப் பேருந்து நிலையம் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் அருகே அண்மையில் மாற்றப்பட்டுள்ளது. இங்கு குடிநீா், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதததால் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனா். வெவ்வேறு ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களும் அடையாளப்படுத்தப்படவில்லை. இதனால், பயணிகள் அலைகழிக்கப்படுகின்றனா்.

பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி மட்டும் ஆமை வேகத்தில் நடக்கிறது. நிரந்தர புதிய பேருந்து நிலையம் அமையும் வரை தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிழற்கூடம் மட்டுமின்றி குடிநீா் வசதி, கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், வெவ்வேறு ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களை ஒலிபெருக்கியில் தெரிவிக்க பணியாளா்களை அமா்த்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலருக்கும், பென்னாகரம் போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com