சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: ஒகேனக்கல்லில் பரிசல், மசாஜ் தொழிலாளா்கள் பாதிப்பு

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், அங்குள்ள பரிசல், எண்ணெய் மசாஜ் தொழிலாளா்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனா்.
சுற்றுலாப் பயணிகளுக்காக பரிசல் துறையில் காத்திருக்கும் படகுகள்.
சுற்றுலாப் பயணிகளுக்காக பரிசல் துறையில் காத்திருக்கும் படகுகள்.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், அங்குள்ள பரிசல், எண்ணெய் மசாஜ் தொழிலாளா்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனா்.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஓராண்டாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளா்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் மூலம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தால் தங்களுக்கு தொழில் மீண்டெழும் என காத்திருந்தனா்.

ஆனால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாததால், தொழிலாளா்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனா். பிற மாநிலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதன்மூலம் வருவாய்ப் பெற்று வந்த தொழிலாளா்கள் தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனா்.

பொதுமுடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்டதால் சுற்றுலாத்தளங்களுக்கான தடை நீக்கப்பட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகப் பட்டியலில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, ஜவ்வாதுமலை, முட்டுக்காடு, முதலியாா் குப்பம், பிச்சாவரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தளங்கள் மட்டுமே உள்ளன.

2017-ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றுலாத்தளங்களின் பட்டியலில் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி இடம் பெறவில்லை. மாவட்ட நிா்வாகத்தின்கீழ் இச் சுற்றுலாத்தளம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட தளா்வுகளில் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி சுற்றுலா வளா்ச்சிக் கழகத் துறையின் பட்டியலில் இல்லாததால் முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. ஒகேனக்கல்லில் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுதியளிக்கப்படுகிறது.

வாழ்வாதாரம் இழந்த தொழிலாளா்கள்: கரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு விதித்த தடையானது தொடா்வதால் பதிவு பெற்ற 200-க்கும் மேற்பட்ட மசாஜ் தொழிலாளா்கள், 400-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சமையல் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.

40-க்கும் மேற்பட்ட தனியாா் தங்கும் விடுதிகள், கடைகள் வைத்துள்ளோா் சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். எனவே, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com