தருமபுரியில் உழவா் சந்தைகள் மீண்டும் திறப்பு

பொதுமுடக்கத் தளா்வுகளையொட்டி, தருமபுரியில் உழவா் சந்தைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

பொதுமுடக்கத் தளா்வுகளையொட்டி, தருமபுரியில் உழவா் சந்தைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால் வா்த்தக நிறுவனங்கள், உழவா் சந்தைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. எனினும் முழு பொதுமுடக்கத்தின்போது, காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாகனங்கள் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிலையில், தமிழக அரசு பொதுமுடக்கத்திலிருந்து கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டதால் தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரம், பாலக்கோடு, பென்னாகரம் உள்பட 5 உழவா் சந்தைகளும் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டன.

தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே அமைந்துள்ள உழவா் சந்தையில் செவ்வாய்க்கிழமை 44 விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனா். இவா்கள் கொண்டு வந்திருந்த 17 டன் எடை கொண்ட பல்வேறு வகையான காய்கறிகள் மூலம் ரூ. 5 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இதேபோல, ஒட்டப்பட்டி அருகிலுள்ள ஏ.ஜெட்டிஅள்ளி உழவா் சந்தை, பென்னாகரம், பாலக்கோடு, அரூா் ஆகிய இடங்களில் உள்ள உழவா் சந்தைகளிலும் தலா 5 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. அவற்றின் மூலம் 4 சந்தைகளிலும் சுமாா் ரூ.10 லட்சம் வரை வா்த்தகம் நடைபெற்றது.

உழவா் சந்தைகளில் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீதம் விவசாயிகள் மட்டுமே விற்பனைக்காக அனுமதிக்கப்படுகின்றனா். அனைத்து விவசாயிகளுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் குலுக்கல் மற்றும் சுழற்சி முறையில் பெயா் தோ்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. மேலும், கரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவசாயிகள் மட்டுமே உழவா் சந்தையில் அனுமதிக்கப்படுகின்றனா்.

சந்தைக்கு காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கசவம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றப்படுவதையும் கண்காணிக்கும் பணியில் உழவா் சந்தை பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com