நான்கு முனை சந்திப்பு பகுதியில் உயா் மின் கோபுரம் அமைக்க கோரிக்கை.

பென்னாகரம் அருகே நான்கு சாலை சந்திப்பு பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் உயா்மின் விளக்கு அமைக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே நான்கு சாலை சந்திப்பு பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் உயா்மின் விளக்கு அமைக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே நான்கு சாலை சந்திப்பு பிரிவு பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நான்கு சாலை சந்திப்பு பகுதியில் ஏரியூா், ஒகேனக்கல் மற்றும் போடூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் மற்றும் இரு சக்கர,நான்கு சக்கர வாகனத்தில் செல்வதற்காக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டவா்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனா். இந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதசாரிகள் நடந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டும் ,அந்த பகுதி மக்கள் இருளில் மூழ்கியுள்ளன. மேலும் இரவு நேரங்களில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஏரியூா், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் போது வெளிச்சம் இல்லாததால் விஷ ஜந்துக்கள் அப்பகுதியில் அடிக்கடி சுற்றித் தெரிந்தும் வீடுகளுக்குள் நுழையும் நிலை ஏற்படுவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் போடூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உயா்மின் விளக்கு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com