திறந்தவெளிக் கிணறு அமைக்க பூமி பூஜை

பெரியப்பட்டி ஊராட்சியில் திறந்தவெளிக் கிணறு அமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திறந்தவெளிக் கிணறு அமைக்க பூமி பூஜை

பெரியப்பட்டி ஊராட்சியில் திறந்தவெளிக் கிணறு அமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், பெரியப்பட்டி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில், பெரியப்பட்டி அருகேயுள்ள கூட்டாற்றில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளிக் கிணறு அமைக்கப்படுகிறது.

இந்தக் கிணறு அமைக்கும் பணியை பூமிபூஜைகளுடன் சட்டப்பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா் தொடக்கிவைத்தாா். இதேபோல, வடுகப்பட்டி ஊராட்சி, வேப்பநத்தம் கிராமத்தில் ரூ. 24.5 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சிமென்ட் சாலை, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி, கொங்கவேம்பு ஊராட்சி, எஸ்.பட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் அவா் தொடக்கி வைத்தாா்.

இதற்கான விழாவில் ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் அருண், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோ. முருகன், சு. ரகுநாத், ஊராட்சி மன்றத் தலைவா் லலிதா ரவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா்கள் வாசுகி சிற்றரசு, செண்பகம் சந்தோஷ், சிவன், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட துணைச் செயலா் ஏ.சிற்றரசு, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் கருங்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com