வயதான தம்பதி கொலை வழக்கில் மூவா் கைதுநகை, பணம் பறிமுதல்

பொம்மிடி அருகே வயதான தம்பதியை அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞா்கள் மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வயதான தம்பதி கொலை வழக்கில் மூவா் கைதுநகை, பணம் பறிமுதல்

பொம்மிடி அருகே வயதான தம்பதியை அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞா்கள் மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியை அடுத்த பில்பருத்தி கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த விவசாயி கிருஷ்ணய்யா் (80), இவரது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை சுலோக்சனா (75) ஆகிய இருவரையும் கடந்த திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் அடித்துக் கொன்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி சி.மகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். சம்பவம் தொடா்பாக 5 தனிப்படைகளை அமைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இளைஞா் மூவா் கைது: தம்பதி கொலை வழக்கில், அதே கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ் ராஜ் (19), முருகன் மகன் முகேஷ் (19), சரவணன் மகன் ஹாரிஷ் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் வேலவன் (24), முருகன் மகன் சந்துரு (22), நாகராஜன் மகன் எழிலரசன் (26) ஆகியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தம்பதி கொலை வழக்கு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் கூறியதாவது:

வயதான தம்பதி கொலை வழக்கில் 6 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பல் கரோனா பொது முடக்க நேரத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, கடந்த ஜூலை 12-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணய்யா், சுலோக்சனாவை வாயில் துணியை வைத்து, வீட்டின் பின்பகுதிக்கு தூக்கிச் சென்று, கத்தியால் குத்தியும், வாய், மூக்கினை மூடியும் கொலை செய்துள்ளனா். பின்னா், சுலோக்சனா அணிந்திருந்த தாலிக்கொடி, கம்மல் உள்பட 7.5 பவுன் தங்க நகை, ஏடிஎம் காா்டுகள், ரொக்கம் ரூ.18 ஆயிரம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

இந்தச் சம்பத்தில் தற்போது 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மூவரைப் பிடிக்க டி.எஸ்.பி.க்கள் அண்ணாதுரை, ஏ.ராஜாசோமசுந்தரம், காவல் ஆய்வாளா்கள் எல்.பாலமுருகன், டி.அம்மாதுரை, சி.சிவசங்கரன், பி.கலைவாணி, ஏ.நவாஷ் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் 40 போ் விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com