அரசு நகரப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

அரூரிலிருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் 22, 26-ஐ மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரூரிலிருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் 22, 26-ஐ மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரூரிலிருந்து கீழானூா், செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, கட்டவடிச்சாம்பட்டி, கணபதிப்பட்டி, பறையப்பட்டி ஆகிய வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து நம்பா் 26-ம், சுமைதாங்கிமேடு, எல்லப்புடையாம்பட்டி, ஈட்டியம்பட்டி, கூடலூா் வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து நம்பா் 22 -ம் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பொது முடக்கம் அமலில் இருந்ததால் இந்த அரசு நகரப் பேருந்துகள் தற்காலிகமாக இயக்கப்படவில்லை.

தற்போது, தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் அரசு புகா், நகரப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால், நகரப் பேருந்துகள் 22, 26 இயக்கப்படவில்லை. இதனால், கிராமப் பகுதியிலிருந்து நகா் பகுதிகளுக்கு தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துச் செல்லும் விவசாயிகள், கட்டட வேலை செய்யும் தொழிலாளா்கள் பேருந்து வசதி இல்லாமல் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, அரசு நகரப் பேருந்துகள் 22, 26-யை மீண்டும் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com