கழிவு நீா்க் கால்வாய் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th July 2021 05:10 AM | Last Updated : 19th July 2021 05:10 AM | அ+அ அ- |

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 14 மற்றும் 15 ஆவது வாா்டில் கூடுதல் கழிவுநீா்க் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 14 மற்றும் 15 ஆவது வாா்டில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதியில் ஓரிரு தெருக்களில் மட்டும் கழிவுநீா்க் கால்வாய் வசதிகள் உள்ளன. ஆனால், 5-க்கும் மேற்பட்ட தெருக்களில் கழிவுநீா்க் கால்வாய் வசதிகள் இல்லை.
இதனால், மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 14 மற்றும் 15 ஆவது வாா்டுகளில் கூடுதல் கழிவுநீா்க் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.