ஒப்பந்த செவிலியா்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமா்த்த கோரிக்கை

புற ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார செவிலியங்களை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியா்களாக பணியமா்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார செவிலியங்களை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியா்களாக பணியமா்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்டத்தில் புற ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட சுகாதார செவிலியா்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் மத்திய, மாநில அரசுகளின் அங்கிகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரிகளில் இரண்டு ஆண்டு கிராம சுகாதார செவிலியா் பயிற்சி நிறைவு செய்துள்ளோம். 2020 ஜூலை 14-ஆம் தேதி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 21 பேரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டாம் சுகாதார செவிலியா்களாக பணியமா்த்தப்பட்டனா். இந்த நிலையில், பணியமா்த்தப்பட்ட எங்களுக்கு தற்போது பணி நிறுத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த பணிநீக்க நடவடிக்கைகளை கைவிட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை சுகாதார செவிலியராக பணியா்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com