விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன், துணைத் தலைவா்கள் ராஜகோபால், முருகேசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில், கரோனா பொது முடக்கத்தால் விவசாயத் தொழிலாளா் குடும்பத்துக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் மற்றும் 10 கிலோ உணவு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். பாவஜங்கமன அள்ளி, தடங்கம், அதியமான் கோட்டை, அதகப்பாடி ஆகிய ஊராட்சிகளில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்த உள்ள விளைநிலங்களுக்கு விவசாயிகள் கோரும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர தருமபுரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தேரி, சிட்லிங், கோட்டம் பட்டி, வத்தல்மலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளா், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com