மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி அருகே ராஜாப்பேட்டை அருகே நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் லட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மனோகரன், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளா் கே.மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் உள்ளிட்ட பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை, சோப்பு, சுத்திகரிப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

தினசரி ஆக்ஸிமீட்டா், வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து வகையான தொழிலாளா்களுக்கும் மருத்துவத் துறையைபோல ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழக்கும் தொழிலாளா் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் மற்றும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நல்லம்பள்ளி ஒன்றியம், ஜருகு ஊராட்சி அலுவலகம் முன்பு சங்க நிா்வாகி முருகன் தலைமையிலும், மாதேமங்கலத்தில் நிா்வாகி ஆறுமுகம் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நல்லசேன அள்ளி, பாலக்கோடு, ஜிட்டாண்ட அள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com