உரக்கடைகளில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு

அரூரில் உரக்கடைகளில் வேளாண்மை துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அரூரில் உரக்கடைகளில் வேளாண்மை துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அரூா் வட்டாரப் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட உரக்கடைகளில் உரம், யூரியா, டிஏபி, பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உரக்கடைகளில், வேளாண் உதவி இயக்குநா் (அரூா்) சா.மோகன் சகாயராஜ் தலைமையிலான அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், உரம், யூரியா விற்பனை மையங்களில் விலைப்பட்டியலை பொதுமக்களின் பாா்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். அனைத்து உரம், யூரியா, பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசு நிா்ணயம் செய்துள்ள விலையின் அடிப்படையில் விற்பனை செய்ய வேண்டும்.

குறிப்பாக டி.ஏ.பி ஒரு மூட்டை ரூ. 1200-க்கு விற்பனை செய்ய வேண்டும். உரம், யூரியா உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், பொதுமக்கள் ஏதேனும் புகாா்கள் இருந்தால் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) 94435 63977 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்தனா். ஆய்வின்போது, வேளாண்மை அலுவலா் இளவரசி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com