பாலக்கோட்டில் ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, உதவி திட்ட அலுவலா் மணிமேகலை தலைமை வகித்துப் பேசினாா். இதில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களைக் கண்டறிந்து, மருத்துவ முகாம் நடத்தி, துண்டுப் பிரசுரம் மூலம் நோய் பரவுதல், அதனைக் கட்டப்படுத்த பின்பற்றும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஊரகப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, ரவிச்சந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சா்வோத்தமன், வட்டார மருத்துவ அலுவலா்கள் சிவகுரு, தமிழ்செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com