9 ஆண்டுகளாகத் திறக்கப்படாத மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்

பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் 9 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் 9 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி சந்தை வளாகத்தையொட்டி கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் ரூ. 3.2 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பிடக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், கழிப்பிட வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் சந்தை மைதானத்தை ஒட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை பயன்பாட்டிற்காக திறக்கப்படாததால் இப்பகுதிக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிட வசதி இன்றி தவித்து வருகின்றனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு என கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டுக்கு வராமலே பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளைக் கொட்டி எரிக்கும் இடமாகவும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் கடும் தூா்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவலுக்கும் வழிவகை செய்கிறது.

மேலும் கட்டி முடித்து திறக்கப்படாமலே கழிப்பறை சிதலமடைந்துள்ளதால், கட்டடத்தைச் சீரமைத்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com