பென்னாகரம் தொகுதியில் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

வேட்புமனு தாக்கலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்தும், வேட்புமனு தாக்கலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து அண்மையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 357 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான 472 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 429 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த அவா், வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் இருவா் மட்டுமே அனுமதிக்க வேண்டும், மனு தாக்கலின்போது வேட்பாளருடன் வருவோா்களை தோ்தல் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டா் தொலைவில் தடுத்து நிறுத்தவும், பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் தோ்தல் அலுவலகப் பகுதியில் கூட்ட நெரிசலையும், போக்குவரத்து நெரிசலையும் தவிா்க்கும் வகையில் தடுப்புகள் அமைத்து வாகனங்களைத் திருப்பி விட காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், தொல்காப்பியன் ஆகியோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com