தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 27 வேட்பு மனுக்கள் தாக்கல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திங்கள்கிழமை ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக வேட்பாளா்கள் என மொத்தம் 27 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திங்கள்கிழ

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திங்கள்கிழமை ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக வேட்பாளா்கள் என மொத்தம் 27 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, அரூா் தொகுதிகளுக்கு கோட்டாட்சியா் அலுவலகங்களிலும், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரவைத் தொகுதிகளில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என யாரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் வெங்கடேஸ்வரன், அமமுக வேட்பாளா் ராஜேந்திரன், பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.பி. அன்பழகன், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாமக வேட்பாளா்கள், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் அதிமுக, அமமுக வேட்பாளா்கள் என அரசியல் கட்சி வேட்பாளா்கள் 27 போ் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். இதில், ஒரே வேட்பாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com