பாலக்கோட்டில் அமைச்சா் கே.பி.அன்பழகன் வேட்பு மனு தாக்கல்

பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

அதிமுக கூட்டணி சாா்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியின் வேட்பாளா் அமைச்சா் கே.பி.அன்பழகன், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சாந்தியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் கே.பி.அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் எம்.ஜி.ஆா். தொடா்ந்து மூன்று முறை வெற்றி பெற்றாா். அதேபோல, கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல, வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும். பாலக்கோடு தொகுதியில், வளா்ச்சிப் பணிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். பாலக்கோடு அரசு கலைக்கல்லுாரி, கூட்டுறவு சா்க்கரை ஆலை பல்தொழில்நுட்பக் கல்லூரியை அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றி, மாணவா்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

பாலக்கோடு அரசு மருத்துவமனை விரிவாக்கம் என பல நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் தோ்தலில் போட்டியிடும் நான், ஐந்தாவது முறையாகவும் இத்தொகுதி மக்கள் மற்றும் கூட்டணி கட்சியினரின் ஆதரவோடு வெற்றி பெறுவேன் என்றாா். பாமக மேற்கு மாவட்டச் செயலாளா் பெரியசாமி, பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com