100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம், மகளிா் திட்டம் சாா்பில் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டும் உறுதிமொழி ஏற்று, விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம், மகளிா் திட்டம் சாா்பில் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டும் உறுதிமொழி ஏற்று, விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம், தருமபுரி மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வண்ணக் கோலமிடும் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா தலைமை வகித்தாா்.

மாவட்ட மகளிா் திட்ட உதவி அலுவலா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு இயந்திரம், புகாா் தெரிவிக்கும் எண் மற்றும் ஒருவிரல் வலிமை உள்ளிட்டவைகளை வண்ணக் கோலமிட்டு தோ்தலில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்றனா்.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும், வாக்குரிமை விற்பனைக்கு அல்ல; அனைவரும் தோ்தலில் ஜனநாயக கடமை ஆற்றுவோம், அச்சமின்றி வாக்களிக்க முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து முள்ளுவாடி பேருந்து நிறுத்தம் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பேரணியின்போது விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்தப் பேரணியில் பேரூராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளா்கள், மகளிா் குழுவினா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com