பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க பறக்கும் படையினா் முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும்

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க, பறக்கும் படையினா் முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
தருமபுரி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்ற தோ்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
தருமபுரி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்ற தோ்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க, பறக்கும் படையினா் முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா்களுடன் தோ்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.ப.காா்த்திகா பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தோ்தலையொட்டி, ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் பறக்கும் படை, நிலையான குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 95 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இக் குழுவினா், வாகனச் சோதனைப் பணியினை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் மிக கவனமாக செயல்பட வேண்டும். புகாா் வரப்பெற்றால் 30 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்ல வேண்டும். சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மக்கள் அதிகமாக கூடும் தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், கலாசார வழிபாடு, பிற கூட்டங்களுக்கு பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து, நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடா்ந்து எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பொது இடங்களில் செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை மேற்கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா்கள் க.ராமமூா்த்தி, அ.சங்கா், எச்.ரஹமத்துல்லாகான், தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கவிதா, வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com