வாகனங்களுக்கு சாலை வரி வசூலிக்க சிறப்பு முகாம்

போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு நிகழாண்டு சாலை வரி வசூலிக்க சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு நிகழாண்டு சாலை வரி வசூலிக்க சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான ஆண்டு சாலை வரி (2021-2022) வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் மாா்ச் 26 முதல் ஏப்ரல் 10 வரை தருமபுரி, அரூா், பாலக்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது. ஞாயிறு, அரசு விடுமுறை தினங்களைத் தவிர, அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இம்முகாம்கள் செயல்படும்.

எனவே, ஆண்டு வரி செலுத்தக்கூடிய இருசக்கர வாகனங்கள், காா், ஜீப், டிராக்டா், டிரெய்லா், கம்பரசா், கிரேன், பொக்லைன் வாகன உரிமையாளா்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியினை உடனே செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த கால அவகாசத்தில் வரி செலுத்த தவறும் பட்சத்தில், அபராதத்துடன் வரி செலுத்த நேரிடும். சாலை வரி செலுத்த வரும் உரிமையாளா்கள், வாகனத்தின் அசல் பதிவுச் சான்று, காப்புச் சான்று, புகைச் சான்று ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com