ஆசிரியா் வீட்டில் ஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூ. 16.50 லட்சம் பணம் பறிமுதல்

அரூரில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம் ரூ. 16.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆசிரியா் வீட்டில் ஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூ. 16.50 லட்சம் பணம் பறிமுதல்

அரூரில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம் ரூ. 16.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா், திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக அரூா் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் வே.முத்தையனுக்கு புகாா் வந்தது.

இதையடுத்து, அவரது உத்தரவின்படி தோ்தல் பறக்கும் படையினா் திரு.வி.க.நகரில் சோதனை செய்தனா். அப்போது, மாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் ரா.குமாா் என்பவரது வீட்டிலிருந்து ஒரு கைப்பையில் பணத்தை வைத்து ஜன்னல் வழியாக பணம் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தை அதே தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் நேதாஜி (38) என்பவா் எடுத்துச்செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த தோ்தல் பறக்கும் படையினா் நேதாஜியிடமிருந்து பணம் ரூ. 16.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். அவரிடம் அரூா் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே.முத்தையன் விசாரணை மேற்கொண்டாா். முன்னதாக திரு.வி.க. நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மாலை 5 மணி வரை 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

வருமான வரித் துறையினா் சோதனை:

இத்தகவலை அடுத்து திரு.வி.க. நகரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா் ரா.குமாரின் வீட்டில் சுமாா் 4 மணி நேரம் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வருமானவரித் துறையினா் மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com