எட்டுவழிச் சாலை திட்டம் தேவையற்றது: அ.செளந்தரராஜன்

அரூா் வழியாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டம் தேவையற்றது என சிஐடியு மாநில பொதுச் செயலா் அ.செளந்தரராஜன் தெரிவித்தாா்.
எட்டுவழிச் சாலை திட்டம் தேவையற்றது: அ.செளந்தரராஜன்

அரூா் வழியாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டம் தேவையற்றது என சிஐடியு மாநில பொதுச் செயலா் அ.செளந்தரராஜன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காளிப்பேட்டை, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, எச்.ஈச்சம்பாடி, அரூா் நகா் ஆகிய இடங்களில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் ஏ.குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்த சிஐடியு மாநில பொதுச் செயலாளா் அ.செளந்தரராஜன் பேசியதாவது:

சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள், நீா் நிலைகள், குடியிருப்புகள் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக தற்போதுள்ள நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியினை மத்திய அரசு வழங்காத காரணத்தால் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முடங்கியுள்ளது. இதனால், லட்சகணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். விவசாயிகள், தொழிலாளா்களின் நலன் காக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும். எனவே, வாக்காளா்கள் அனைவரும் திமுக கூட்டணியை ஆதரித்து வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com