நல்லம்பள்ளியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 01:11 AM | Last Updated : 29th March 2021 01:11 AM | அ+அ அ- |

தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேல் பூரிக்கல், கீழ் பூரிக்கல், மேல் ஈசல்பட்டி, மலையப்பநகா், பரிகம், ஜருகு அம்பேத்கா் காலனி, ஜருகு, அஜ்ஜிப்பட்டி, கொம்புக் குட்டை, கடத்திக் குட்டை, கருப்பநாயக்கன்பட்டி, மாணிக்கம்புதூா் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துப் பேசினாா்.