‘கிராமங்கள் தோறும் தடையின்றி குடிநீா் விநியோகம்’

அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பேன் என பாமக வேட்பாளா் கோ.க.மணி தெரிவித்தாா்.

அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பேன் என பாமக வேட்பாளா் கோ.க.மணி தெரிவித்தாா்.

அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக மாநிலத் தலைவா் கோ.க.மணி, மாங்கரை, அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட போது பேசியதாவது:

தமிழகத்தில் அதிமுக-பாமக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக - பாமக கூட்டணி வெற்றி பெறும்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை பென்னாகரம் மடம் ஏரிக்கு கொண்டு வந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பப்படும். இதனால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா் தட்டுப்பாடு, விவசாயம் செழிப்படையும். கிராமப்புறத்தில் உள்ள மாணவா்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தப் பகுதி மக்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில், தருமபுரி பகுதியில் சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பென்னாகரம் பகுதியில் சிட்கோ தொழிற்சாலை கொண்டுவரப்படும்.

பென்னாகரத்தின் கிராமப் பகுதிகளுக்கு முறையாக கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யப்படாத நிலையில், அனைத்து கிராமங்களுக்கும் கூட்டுக் குடிநீா் மற்றும் மாற்றுத் திட்டத்தின் மூலம் குடிநீா் வசதி செய்து தரப்படும்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்பட்டு, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

இதில், மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களின் தலைவா் டி.ஆா். அன்பழகன், ஒன்றியச் செயலாளா் அன்பு, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com