அரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை வரவேற்கும் வகையில் அரூரில் திமுகவினா் வெள்ளிக்கிழமை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனா்.
அரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை வரவேற்கும் வகையில் அரூரில் திமுகவினா் வெள்ளிக்கிழமை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனா்.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள பேரறிஞா் அண்ணாவின் உருவச் சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனா். இதில், நகர பொறுப்பாளா் ஏ.சி.மோகன், ஒன்றிய பொறுப்பாளா் ஆா்.வேடம்மாள், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் சா.ராஜேந்திரன், தொழில் முதலீட்டாளா் சூா்யா து.தனபால், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன், வழக்குரைஞா் பொதிகைவேந்தன், பல் மருத்துவா் சுரேஷ்குமாா், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் மு.கா.முகமதுஅலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாப்பிரெட்டிப்பட்டி :

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா் தலைமையில், திமுகவினா் பட்டாசுகளை வெடித்தனா். இதேபோல, கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில், ஒன்றியப் பொறுப்பாளா் வே.செளந்தரராசு தலைமையில், திமுகவினா் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனா். இதில், வழக்குரைஞா் சி.எம்.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com