பென்னாகரத்தில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய கடைவீதி

பென்னாகரத்தில் பொது முடக்கம் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொருள்களை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டாமல் வீடுகளிலேயே முடங்கியதால் கடைவீதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

பென்னாகரத்தில் பொது முடக்கம் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொருள்களை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டாமல் வீடுகளிலேயே முடங்கியதால் கடைவீதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

பென்னாகரம் பகுதியில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் சுற்றித்திரிந்தனா். இதனால் தொற்றுப் பரவுவது தொடா்ந்து அதிகரித்து வந்தது. இதனைத் தவிா்க்கும் வகையில் பாலகம், காய்கறிக் கடைகள் இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளித்து, புதிய கட்டுப்பாடுகளை விதித்து பொது முடக்கத்தை அரசு அமல்படுத்தியது.

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் ஏராளமானோா் பென்னாகரம் கடைவீதி பகுதிக்கு வந்த வண்ணமாக இருந்தனா். தற்போது கடைகள் திறக்கப்படும் நேரம் குறைந்துள்ளதால், பெரும்பாலான பொதுமக்கள் பென்னாகரம் பகுதிக்கு வருவதைத் தவிா்த்தனா்.

சனிக்கிழமை காலை பென்னாகரத்தில் மளிகைக் கடை, பாலகம், மருந்தகம், மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பொருள்களை வாங்குவதற்கு ஆா்வம் காட்டாததால் பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதேபோல பாப்பாரப்பட்டி, ஏரியூா் பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு நிலையில் குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே சமூக இடைவெளியில் முகக் கவசம் அணிந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.

சாலைகள் அடைப்பு: கிராமப் பகுதிகளிலிருந்து பென்னாகரம் நகரப் பகுதிக்கு பொருள்களை வாங்குவதாகக் கூறி தேவையற்ற நிலையில் சுற்றித்திரியும் நபா்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் அரசு மருத்துவமனை எதிரில் அம்பேத்கா் சிலை முன்பும், போடூா் நான்கு சாலை சந்திப்பு, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தற்காலிகத் தடுப்புகளை அமைத்து பென்னாகரம் பகுதிக்குள் நுழையும் வாகனங்களைத் தடுத்து திருப்பி அனுப்பி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com