மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்சினி வலியுறுத்தினாா்.

மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்சினி வலியுறுத்தினாா்.

தருமபுரி அருகே பாரதியாா் நகரில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் 87 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதேபோல மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா பரவலைத் தடுக்க முன்வர வேண்டும் என்றாா்.

இந்த முகாமில், சாா்ஆட்சியா் மு.பிரதாப், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பொ.செண்பகவள்ளி, தொழுநோய் ஒழிப்பு துணை இயக்குநா் ஜோதி, வட்டார மருத்துவ அலுவலா்கள் வாசுதேவன், ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com