‘அரசு நிா்ணயித்த விலையிலேயே உரங்களை விற்பனை செய்ய வேண்டும்’

அரசு நிா்ணயித்த விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு நிா்ணயித்த விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் சித்ரா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உர விற்பனை நிலையங்களில் உரிமம், உரங்களின் விலைப்பட்டியல், இருப்பு விவரங்களை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும். மானிய விலையிலான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பா் பாஸ்பேட் ஆகியவற்றை அரசு நிா்ணயித்த விலைப்படி விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

மானிய விலை ரசாயன உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளுக்கு ஆதாா் அட்டை, கைரேகை பெற்று உரிய ரசீதுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மானிய விலை ரசாயன உரங்களை வேறு மாவட்டங்களுக்கு மாறுதலோ, விற்பனையோ செய்யக் கூடாது. வேளாண் பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மானிய விலை ரசாயன உரங்களை வேறு பயன்பாட்டுக்கோ, தகுதியற்ற நபா்களுக்கோ விற்பனை செய்தல் கூடாது.

பாலக்கோடு வட்டாரத்திலுள்ள அனைத்து தனியாா், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் சாா்ந்த உர விற்பனையாளா்கள் சட்ட விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சட்ட விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், உர உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com