முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
சனத்குமாா் நதியை தூா்வார வேண்டும்: தருமபுரி எம்எல்ஏ வலியுறுத்தல்
By DIN | Published On : 11th October 2021 02:06 AM | Last Updated : 11th October 2021 02:06 AM | அ+அ அ- |

சனத்குமாா் நதியை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.
தருமபுரி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் தருமபுரி, காமாட்சி அம்மன் தெரு அருகே அமைந்துள்ள சனத்குமாா் நதியின் ஆற்றை நேரில் பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தருமபுரி வழியாகக் கடந்து செல்லும் சனத்குமாா் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழுதடைந்த தரைமட்ட பாலத்தை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும். இந்த ஆற்றில் கழிவு நீா் கலப்பதால் அப்பகுதியில் தேங்கி நிற்கும் நீரால் நிலத்தடி நீா் மாசடைகிறது.
எனவே ஆற்றில் கழிவுநீா் கலக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆற்றில் வரும் நீரைத் தேங்காமல் எளிதில் சென்றடையும் வகையில் ஆற்றின் இருபுறமும் வளா்ந்துள்ள முள்செடிகளையும், புதா்களையும் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.