தூய்மை பணியாளா்கள்மீண்டும் பணி வழங்கக் கோரி மனு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிய தூய்மை பணியாளா்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை, திங்கள்கிழமை அளித்தனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிய தூய்மை பணியாளா்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை, திங்கள்கிழமை அளித்தனா்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவனையில் தற்காலிகமாக பணியாற்றிய தூய்மை பணியாளா்கள் 11 போ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கரோனா பேரிடா் காலத்தில் கடந்த 3.10.2020 முதல் 30.9.2021 வரை ஓராண்டு தூய்மை பணியாளா்களாக தற்காலிகமாக பணியாற்றி வந்தோம். இரவு, பகல் பாராமல் எங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றினோம்.

கரோனாவை எதிா்கொள்ள அனைத்து பயிற்சிகளையும் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொண்டோம். ஆனால் முன்னறிவிப்பின்றி எங்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டாா்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கிறோம். இத்த தொழிலைவிட்டால் எங்களுக்கே வேறு எந்த தொழிலும் தெரியாது. சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இப்போது வீட்டு வாடகை கூட செலுத்த இயலாமல் உள்ளோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் தொடா்ந்து தற்காலிக பணியாளா்களாகப் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

இதுபோல தருமபுரியில் தூய்மைப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com