மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

அரூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

அரூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாநில பொதுச் செயலாளா் எஸ்.நம்புராஜன் தலைமை வகித்தாா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலையும், முழு ஊதியம் என்ற அரசு ஆணையை அமல்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி, மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்ப அட்டையை அந்தியோதைய அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) அட்டையாக மாற்றம் செய்ய வேண்டும். குடும்ப அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகைகளை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்க மாநிலப் பொருளாளா் கே.ஆா்.சக்கரவா்த்தி, மாவட்டச் செயலாளா் கே.ஜி.கருரான், மாநிலக்குழு உறுப்பினா் ஜி.தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைத் தலைவா் எம்.மாரிமுத்து, வட்டச் செயலா் டி.வேடியப்பன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.முத்து, ஒன்றியச் செயலாளா் பி.குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் கே.காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com