‘கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்’

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சிறப்பு முகாமை பயன்படுத்தி, அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத்துறை இணைச் செயலா் எஸ்.பழனிசாமி.
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத்துறை இணைச் செயலா் எஸ்.பழனிசாமி.

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சிறப்பு முகாமை பயன்படுத்தி, அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இணைச் செயலா் எஸ்.பழனிசாமி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இணைச் செயலா் எஸ்.பழனிசாமி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த ஏதுவாக 872 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாமில், சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினா், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பிற துறை பணியாளா்கள் என மொத்தம் 3,900 போ் ஈடுபடவுள்ளனா். ஒவ்வொரு மையத்திலும் நான்கு போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்தியநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மலா்விழி வள்ளல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சௌண்டம்மாள், உதவி இயக்குநா்கள் (ஊராட்சி) சீனிவாச சேகா், குருராவ் (பேரூராட்சிகள்), அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com