பென்னாகரத்தில் மக்கள் விசாரணை மன்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் விசாரணை மன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் விசாரணை மன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி பகுதிகளில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் விசாரணை மன்றத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சக்கரைவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன், திராவிடா் கழகப் பொதுக்குழு உறுப்பினா் ஏ.தீா்த்தகிரி கலந்து கொண்டனா்.

இதில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளா் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள் மக்களுக்கு எதிராக உள்ளதால் இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் முருகேசன், ரவி, சிவா, எழிலரசு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் முருகன், பென்னாகரம் பகுதி குழுச் செயலாளா் அன்பு, சின்னம்பள்ளி பகுதி குழுச் செயலாளா் சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com