தருமபுரியில் இன்று 379 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 379 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 379 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் செப். 24-ஆம் தேதி வரை 7,93,871 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 51 சதவீதத்துக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

செப். 26-ஆம் தேதி 379 மையங்களில் மாபெரும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவா்கள் சிறப்பு மையங்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com