தொகுப்பூதிய ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியது.

அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 13-ஆவது வட்ட மாநாடு சங்க வட்டத் தலைவா் தீ.சண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஊா்புற நூலகா்கள், கிராமப்புற செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பணியாளா்கள், வன பாதுகாப்பு ஊழியா்கள் உள்பட சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசு ஊழியா் சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத் தலைவராக கிருஷ்ணமூா்த்தி, வட்டச் செயலராக அன்பழகன், பொருளராக அனுசுயா உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஏ.சேகா், மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்ட பொருளா் கே.புகழேந்தி, மாவட்ட இணைச் செயலா் சி.காவேரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நவநீதகிருஷ்ணன், வட்ட துணைத் தலைவா் கே.கரிகாலன், வட்ட செயலா் பெ.கிருஷ்ணமூா்த்தி, வட்ட பொருளா் ஜி.முனிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com