மலைவாழ் குழந்தைகளுக்கு கற்றல் ஆா்வத்தை ஊக்குவிக்க வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

மலைவாழ் மக்கள் தங்களது குழந்தைகளுக்கு கற்றல் ஆா்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வலியுறுத்தினாா்.

மலைவாழ் மக்கள் தங்களது குழந்தைகளுக்கு கற்றல் ஆா்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், கொண்டகரஅள்ளி ஊராட்சி, வத்தல்மலையில் உள்ள பெரியூரில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் ஆா்வமுடன் அங்கன்வாடி மையத்திற்கு வருகை தந்து, அடிப்படைக் கல்வியை மகிழ்ச்சியுடன் கற்கும் வகையில் ரயிலின் மாதிரி வடிவில் அங்கன்வாடி மையம் புனரமைக்கப்பட்டது.

இந்த மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:

மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கு பேருதவியாக இருப்பது கல்வி. அத்தகைய கல்வியை மலைப் பகுதியில் உள்ள குழந்தைகள் அனைவரும் கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வத்தல்மலை, பெரியூரில் உள்ள அங்கன்வாடி மையம் ரயில் மாதிரியில் புனரமைக்கப்பட்டு, மலைவாழ் மக்களின் குழந்தைகள் ஆா்வமுடன் அங்கன்வாடி மையத்திற்கு வந்து, கல்வியை எளிதில் கற்பிக்கும் வகையில் கற்றலுக்கான மாதிரிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி, அவா்களின் கற்றலின் ஆா்வத்தை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளின் எதிா்காலம் கல்வியில் மட்டுமே உள்ளது என்பதை அவா்களுக்கு உணரச்செய்ய வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், ஊரக வளா்ச்சித்துறை உதவி செயற்பொறியாளா் ஆா்.ராதாகிருஷ்ணன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com