குழந்தைத் திருமணங்களைத் தடுக்க மாதா் சங்கத்தினா் வலியுறுத்தல்

பாப்பாரப்பட்டி பகுதியில் குழந்தைத் திருமணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பாப்பாரப்பட்டி பகுதியில் குழந்தைத் திருமணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க 3-ஆவது வட்டார மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு சத்யா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பூபதி மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் கிரைஸாமேரி பேசுகையில், ‘ கரோனா தொற்று காலத்தில் பாப்பாரப்பட்டியில் உள்ள மலைக் கிராமங்களில் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றன. அதுகுறித்து அரசு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

வட்டாரச் செயலாளா் ராஜாமணி அறிக்கை சமா்ப்பித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். பாப்பாரப்பட்டியில் குழந்தைத் திருமணங்கள், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாப்பாரப்பட்டி 8- ஆவது வாா்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் கேலிவதை, பகடிவதை செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் செயல் குறித்த புகாா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். குடிநீா்க் கட்டணம், குடிநீா் இணைப்பு வைப்புத் தொகை ஆகியவற்றை குறைக்க வேண்டும். மலையூா் கிராமத்திற்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டத் தலைவா் அ.ஜெயா, நிா்வாகிகள் காவேரியம்மாள், பவித்ரா, சத்யா, உமாராணி பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com