பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய மாணவா்கள் ரத்த தானம்

தருமபுரி, பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவா்கள் ரத்த தானம் செய்தனா்.

தருமபுரி, பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவா்கள் ரத்த தானம் செய்தனா்.

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில், ஆராய்ச்சி மையத்தில் பயிலக்கூடிய 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் ரத்த தானம் செய்தனா்.

ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொ) மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை, மேலாண்மையியல் துறைத் தலைவா் காா்த்திகேயன், ஆங்கிலத் துறைத் தலைவரும், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலருமான சி.கோவிந்தராஜ் ஆகியோா் தொடக்கி வைத்தனா். ரத்த தானத்தை பெற்ற தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குருதி வங்கி மருத்துவா்கள், அதற்கான சான்றிதழ்களை வழங்கினா்.

இந்த முகாமில், ஹெச்டிஎஃப்சி வங்கி மேலாளா்கள் விஜயராஜ் (கிருஷ்ணகிரி), அம்பிகேஸ்வரன் (தருமபுரி), ஆராய்ச்சி மைய பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com