வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு

காா்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளான புதன்கிழமை தருமபுரியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளான புதன்கிழமை தருமபுரியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சென்னகேசவ பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

அதுபோல கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில், அதகப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோயில், அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கடரமண சுவாமி கோயில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோயில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு வைணவக் கோயில்களில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com